badge

Followers

Sunday 13 May 2012

அம்மா என்ற...




அன்னையர் தினத்தில் அம்மாவை பற்றிய பாடல்கள்,புகழாரங்கள் ,மனதைதொடும் எழுத்துக்கள்...பேச்சுக்கள்...எல்லாம் கட்டாயம் ஆகிவிட்டது....

இறைவன் எல்லா இடத்திலும் இருக்க முடியாது என்பதால் அம்மாவை சிருஷ்டிதான்...
ஆண்டவன் கூட just தசாவதாரம் தான் எடுத்தார்...

ஆனால்....
அம்மா...அவள் ,அவளுக்கே தெரியாமல் எடுக்கும் அவதாரங்கள் எத்தனை ,எத்தனை....

குழநதையை கருவாய் ௧௦ மாதங்கள் சுமக்கும் சுமைதாங்கி...
குழந்தையின் அழுகையை வைத்தே அது பசி அழுகையா...வலி அழுகையா...அல்லது சும்மா அழும் செல்ல அழுகையா என்று கண்டுகொள்ளும் சங்கேத மொழி நிபுணி!
குழநதை நெற்றியை தொட்டுபார்த்தே குழந்தையின் காய்ச்சல் அளவை சரியாகச்சொல்லும் நடமாடும் தெர்மோமீட்டர்...
குழந்தையை கன்னல் பார்த்தே வயிறு பசிக்கிறது என்று கரெக்டாக சொல்லும் உயிருள்ள xray  machine!!!
தாலாட்டுப்பாடும்  பாடகி...
பாடம் சொல்லித்தரும் ஆசிரியை...
பாராட்டும் ரசிகை...
பொய் சொன்னால் முகம் பார்க்காமலே கண்டு பிடிக்கும் LIE DETECTOR ...
குழந்தைகளுக்காக அப்பாவிடம் தூது போகும் சமாதான தூதுவர்...
குழந்தைகளை யார்  என்ன  தவறாக  சொன்னாலும் சம்மன் இல்லாமல்  ஆஜார் ஆகும் வக்கீல்...
காலம் முழுவதும் குழந்தைக்காக சம்பளம் வாங்காமல் முழு நேரமும் உழைக்கும் சமயல்க்காரி...ஆயா...காவல்க்காரி...நர்ஸ்...கதைசொல்லி...அழகுக்கலை நிபுணி...ஆடை வடிவமைபாளினி...ஆலோசகர்.... மனோதத்துவ நிபுணர்...
குழந்தைகள் வளர்ச்சியை காலமெல்லாம் உலக அதிசயம் போல ஆச்சரியப்பட்டு ரசித்து வியக்கும் வெகுளி...
குழந்தைகளின் வெற்றி தோல்விகளை தன்னுடையதாக நினைத்து உருகும் முகம் காட்டும் கண்ணாடி...
குழந்தைகளுக்காக எதையும் கூசாமல் த்யாகம் செய்யும் த்யாகி...
இவள் காலமெல்லாம் சுமந்த குழநதை இவளை பாரமாக நினைத்து ஒதுக்கினாலும் 
"அவனுக்கு என்ன கஷ்ட்டமோ? "என்று சொல்லும் பைத்தியக்காரி...


Saturday 12 May 2012

மறக்க முடியாத மூன்று விருந்துகள்... (2)

                         

ரமேஷ் மேத்தா ...

வட இந்தியர்...

ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் மூத்த அதிகாரி ...

பழக இனியவர் ...

தீபாவளி விருந்து என்றால் நாம் தீபாவளி அன்று அல்லது அதற்கு முதல் நாள் நடத்துவோம்...

அவர் வீட்டில் கிட்ட தட்ட 10 நாட்கள் விருந்து நடக்கும் ...

ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வித விருந்தினர்களை கூப்பிடுவார்...

ஒரு நாள் ஆபீஸ் நண்பர்கள்...ஒரு நாள் உறவு...ஒரு நாள் மனைவியின் உறவினர் ...ஒரு நாள் அபார்ட்மென்ட் நண்பர்கள்...என்று...

 எங்களை அழைத்த அன்று தான் நான் முதல் முதலாக அவர் வீட்டுக்குப் போனேன்....

மிக அழகாக , நறுவிசாக இருந்தது அவர் வீடு...

அதை அவ்வளவு அருமையாக வைதிருப்பது அவர் மனைவியும் ,திருமணமாகத சகோதரியும்...

                                  


டைனிங் டேபிள் கொள்ளாத அளவு வித விதமான பதார்த்தங்களுடன் விருந்து...

சூடான சூப்,கொறிக்க மசாலா முந்திரி,குட்டி குட்டியாக கட்லெட் ,விதவிதமான சப்பாத்தி கள்...பூரிவகைகள்...சுவையான தால் ,பனீர் சப்ஜி ,புலாவ்,4 வகை இனிப்புகள்...(சுடசுட...) 

5 star ஹோட்டல் களில் கூட கிடைக்காத வடஇந்திய ஸ்பெஷல் சோள ரோட்டி ,டால் பாட்டி ,போன்ற வகைகள் என்னை திக்கு முக்கட வைத்தன...

அதன் பிறகு ,"என்ன இருந்தாலும் உங்கள் ஊர் சாப்பாடு தான் உங்களுக்கு பிடிக்கும் " என்று சாதமும் ரசமும் ,தயிர் ,மாவடுவும்-அம்பிகா அப்பளாம்  கடையில் வாங்கியது!



                                                
பிறகு ,வீட்டில் செய்த குல்பி...

சாப்பிட்ட பிறகு அரட்டை அடித்துக்கொண்டிருந்த போது 
திருமதி மேத்தாவிடம் ,சில உணவுக் குறிப்புகளை கேட்டு கொண்டேன் ...

"விருந்தை வாயார ,மனமார பாராட்டினேன் ..."

அவர்கள் வீட்டில் சமையலுக்கு உதவ ஆளும் இல்லை என்று தெரிந்த போது 

"அப்படியானால் ,நீங்கள் இந்த விருந்தை மதியமே தயார் செய்ய ஆரம்பித்து இருக்க வேண்டுமே..."என்றேன் ...

" குல்பியை காலையிலே செய்ய ஆரம்பித்து விட்டென்...நாத்தனார் கையோடு 
மாவு பிசைந்து காய் நறுக்கினார் ...நான் மதியம் குழந்தைகள் ஸ்கூலில் இருந்து வரும் முன் ஸ்வீட் கள் செய்ய உட்கார்ந்து விட்டேன்..."என்றார் சிரித்த படி ...

தினமும் இப்படியா உழைக்கிறார்?அது தான் 10 நாள் விருந்து நடத்துகிறாரே  ரமேஷ் மேத்தா...



4-5 பேர் சாப்பிட இரண்டு பெண்கள் கிட்டத்தட்ட 8 மணி நேரம் உழைத்து எனக்கு சங்கடத்தை தந்தது...இவர்கள் சமையல் இயந்திரங்கள் போல உழைத்து தெரிந்ததும் ஏனோ கூசியது...

தீபாவளியும் வந்தது...


மேத்தா வீட்டுக்கு வாழ்த்து சொல்ல போன் பண்ணினால் யாரும் எடுக்க வில்லை...

அடுத்த நாள் ,விஷயம் தெரிந்தது...

திருமதி மேத்தா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார் என்று...

"இரண்டு வாரமாக ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் வேலை...இவங்களுக்கு சர்க்கரை,ரத்த அழுத்தம் ,மூட்டுவலி எல்லாம் உண்டு...அதை கவனிக்காமல் விட்டு நேற்று மயக்கம் போட்டு விழுந்துவிட்டார் ...அலைச்சலால் இடுப்பு  வலி வேறு அதிகமாகி traction  போடுகிறார்கள்.." என்று கேள்விப்பட்ட பொது நிஜமாகவே கஷ்டமாக இருந்தது...அந்த பெண் யந்தரத்தை நினைத்து...

ஹாஸ்பிட்டல் போயி அவரை பார்த்த போது "அவருக்கு இந்த உபாதைகள் வர காரணமாக இருந்த விருந்துக்கு"ப்போன என் மீதும் கோபம் வந்தது...

அவர் கணவருடன் நாங்கள் பேசி  "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்பது விருந்துக்கு மட்டும் அல்ல...விருந்தோம்பல் செய்பவருக்கும் தான் என்று புரிய வைத்தோம"

அடுத்த தீபாவளி விருந்தை ரமேஷ் மேத்தா ஒரே நாள் விருந்தாக கொடுத்தார் ...
ஒரு நல்ல caterer இடம் உணவை ஆர்டர் செய்து....

திருமதி மெத்தா வும் சோர்வு இன்றி அனைவரையும் உபசரித்தார்...











Thursday 10 May 2012

மறக்க முடியாத மூன்று விருந்துகள்! ( 1)




South Indian thali meals

எத்தனையோ விருந்துகள் ,விதவிதமாய் உணவுகள் என்று சாப்பிட்டு இருந்தாலும் ,
என்னால் மறக்க முடியாத மூன்று விருந்துகள் பற்றி இந்தப்பகிர்வில் சொல்லப்போகிறேன்...


இந்த விருந்துகளில் அப்படி என்ன ஸ்பெஷல் ? என்று கேட்கிறீர்களா?

இருங்க...சொல்கிறேன்!!!



முதலில்...

ஒரு இளம் தம்பதியர் ...(கணவர் ஆபீசில் வேலை செய்பவர்) புது மனைவி ஊரில் இருந்து வந்த சந்தோஷத்தில் பாஸ் + அவர் மனைவியை (கணவர் + நான்)  கட்டாயப்படுத்தி விருந்துக்கு அழைக்க...நாங்களும் ஒரு கிப்ட்டை வாங்கிக்கொண்டு அவர்கள் வீட்டில் சரியாகக் எட்டு மணிக்கு ஆஜர்!

உள்ளே போனால் அந்தப்பையன் அசடு  வழிகிறான்...

அந்தப்பெண்ணோ பேய் அறைந்தது போல முழிக்கிறாள்!

உபசார சம்பாஷனைகள் ,விசாரிப்புகள் நடந்தாலும் அங்கு ஏதோ பிசிறு அடிக்கிறது...

"முதலில் ஆரஞ்சு ஜூஸ் " என்று அவள் கொண்டுவந்து நீட்டினாள்!

ரச்னாவை குடித்து தாகசாந்தி செய்துகொண்ட பிறகு நேரம் போகிறது...

"சாப்பிட வாங்க "என்று புருஷனும் பெண்டாட்டியும் கூப்பிடும் வழியே காணோம்!

சரி தான்! "இன்று ஆஹிரி கேட்டு விட்டோம் போலிருக்கிறது" என்று நினைத்த படி இருக்க...

அவள் மெதுவாக...

"ஆண்டி ...உங்களுக்குஅதிக  காரம் பிடிக்குமா?"

என்று கேட்க..."இல்லை மா ...ரொம்பக்காரம் சாப்பிடமாட்டேன்"

அவள் முகத்தில் சற்று நிம்மதி...

"எனக்கு தெரிஞ்ச அளவில் சமைசிருக்கேன்!கொஞ்சம் உள்ளே வந்து ருசி பாருங்களேன்"

என்று அழைத்த பொது கிட்டத்தட்ட ஒரு லேப் வெள்ளலி போல உணர்ந்தேன்!

சமையல் அறை ...பேட்டை யுத்தம் நடந்து முடிந்தது போல இருந்தது!

ஒரு ஹாட் கேசில் இருந்து ஏதோ கொழகொழப்பாக ஒரு ஸ்பூனில் எடுத்து நீட்டினாள் !

வாயில் தைரியமாகப்போட்டுகொண்டேன்! 

சூடாக ...உப்பு ருசியுடன் கொஞ்சம் மசாலா-தீசல் வாசனையுடன் ஒரு வஸ்து!

"புலாவ் செஞ்சேன் ஆண்டி ...கொஞ்சம் தண்ணி ஜாஸ்த்தி ஆயிடிச்சு! ஆனால் காரம் ரொம்பப்போடலை ஆண்டி..." என்றாளே பரிதமாய் ....

"தயிர் பச்சிடி சரியா இருககா ?என்று அவள் நீட்டிய கிண்ணத்திலிருந்து புளித்த வாசனை ஊரை கூடியது!

"சின்னப்போண்ணு ...போனால் போகட்டும்..." என்ற படி 

தட்டில் விஜிடப்ல் பொங்கல்(!) + புளிச்ச தயிர் பச்சிடி + சிப்ஸ் (நல்ல வேளை ! கடையில் வாங்கியது!) வடக்...வடக் சப்பாத்தி ...வேகாத உருளைக்கிழங்கு மசாலா என்று பரிமாறி எங்களை திக்கு முக்கட வைத்தால்!

"பலி கடா ரேஞ்சில் என் கணவரும் சப்பாத்தியை கஷ்டப்பட்டு மெல்ல அந்தப்பையன்
"சாருக்கு இன்னொரு சப்பாத்தி கொண்டா ..." என்று அவளை விரட்டினான்!

"பரவா இல்லையா  சார்?"என்றவனிடம் ...

"நல்ல homely சாப்பாடு!"என்று பாராதினார்!


கடைசிஇல் ...

" ஸ்வீட் சாப்பிடுங்க.."என்று  ஜீராவில் ஊறிய கருங்கல் போல எதையோ நீடினாலே பாருங்கள்...

இன்ஸ்டன்ட் குலாப் ஜாமுன் தயாரிப்பாளர் யாராவது அதை சாபிட்டால் தற்கொலை செய்து கொள்வார் !!!!!!

எப்படியோ கொஞ்சம் சாப்பிட்டதாக பெயர் பண்ணிவிட்டு கிளம்பினோம்!

"சாரி ஆண்டி ...ரொம்ப நல்லாவே இல்லையா?" என்று கேட்ட போது 

"சின்னப்பொண்ணு ...போகப்போக சரியா சமைக்க வந்துடும்! கவலை படாதே ...நாம் ஒவ்வருவரும் இப்படிதான் சமையல் கற்று கொள்கிறோம் ..."

என்று சமாதனம் சொல்லிவிட்டு வந்தேன்!

திரும்பி வரும் வழியில்...

காரை நிறுத்தி ஐஸ் க்ரீம் வாங்கி வந்த என் கணவரை பார்த்து சிரித்தேன் ...

"என்ன சிரிக்கறே?"

என் mind voice ஐ கேட்டு விட்டார் .போல.....

"கலியுகத்துல கைமேல பலன் என்று சும்மாவா சொன்னார்கள்?"என்றேன் ...

"புரியலே ..."

"நேத்து என் சமையலை பற்றி ஒரு 40 பக்க நோட் நிறைய எழுதும் அளவுக்கு குறை  கண்டுபிடித்தீர்கள்...இப்போ வாய் திறக்காமல் விருந்து சாப்பிட்டதை பார்தேன்..."

வீடு வரும் வரை அவர் வாய் திறக்கவில்லை!

பிறகு சில மாதங்கள் என் சமையலை குத்தம் சொன்னால் ..."விருந்து...விஜிடப்ல் பசை...வரட்டி சப்பாத்தி..homely  food ....."என்று நான் சங்கேத மொழி பேசினால் மீண்டும்

" கப்ப் சிப்!!!!!!!!!!!!!!!!!!"



(அடுத்த விருந்து தொடரும்...)

Wednesday 9 May 2012

காலை எழுந்தவுடன் க்ராஸ் வோர்ட் ...


சில பழக்கங்கள் எப்பொழுது ,ஏன் ,எதற்காக ஆரம்பித்தது என்றே தெரியாது ...
ஆனால் ,நாம் தொடர்ந்து செய்து கொண்டிருப்போம்!

அது போல பலபல வருஷங்களாக என்னிடம் ஒட்டிகொண்டுள்ள ஒரு சிறிய பழக்கம்-செய்தித்த,பத்திரிகைகளில் (இப்போது இணையதில்) வரும் கிராஸ்வோர்ட் /குறுக்கெழுத்து புதிர்களை போடுவது...

இப்பழக்கம் என் அப்பாவிடமிருந்து எனக்கு வந்தது என்று கூட சொல்லலாம் ...

ஆனால் ,அப்பாவுக்குப்பிடித்த புதிர் சட்று கடினமான வகை குறுக்கெழுத்து...

நான் ,சாதா தினமலர் வாரமலர்,உமன்ஸ் இரா ...போன்ற பத்திரிகைகளில் வரும் புதிர்கள் என் இலக்கு!

"இதை போட மூளையே வேண்டாம்..." என்று என் மகன் கேலி செய்வான் !

வாஸ்தவம் தான்!
"இந்தப்புதிர்களை விடுவிக்க அதீத அறிவு தேவை இல்லை தான்!

மக்குக்கும் சுமார் ராகத்துக்கும் இடைப்பட்ட அறிவு போதும் ..."என்பேன் .

ஆனால்,இதை விடுவிக்கும் பொழுது கிடைக்கும் திருப்தி இருக்கிறதே ...அது அலாதி...

யோசித்துப்பார்க்கும் போது ....

வாழ்க்கையே ஒரு குறுக்கெழுத்து புதிர் போல தான் ...

ஒரு சமயம் பார்த்தால் ஒன்றுமே புரியாது...தலை சுற்றும் !

நாம் பிரச்சனைகளால் சூழ்ந்து இருப்பது போல இருக்கும்!

ஏதோ ஒரு சிறு துப்பு கிடைத்து குறுக்கெழுத்தில் ஒரு வார்த்தை எழுதிவிட்டால் அதை பிடித்துக்கொண்டே மேலும் ஓரிரு வார்த்தைகள் புலப்படும்...

அதை போலவே...

நடைமுறை வாழ்க்கையிலும், ஒரு சிறு பிரச்னை தீரும் போது ,மேலும் ஒரு சில பிரச்சனைகள் தீர்ந்து விடும்...(இது நான் அனுபவித்த உணமை ...)

ஒரு சிறு தவறு (அறியாது) செய்தாலும் ,தொடர்ச்சியாக பல தவறுகள் நடக்கும் ...எங்கோ ஒரு தவறு சரி செய்ய பட்டால் பல தவறுகள் சரியாகும்!

எப்போதும் சரி செய்ய தயாராக இருந்தால் புதிர்கள் விலகு...பிரச்சனைகளும் தான் !

நாம் கஷ்ட்டப்பட்டு முயலாமலே சில பிரச்சனைகளுக்கு விடை கிடைக்கும்...

மண்டையை உடைதுக்கொன்டாலும் சில பிரச்சனைகளுக்கு விடை கிடைக்காது!

நாம் எதையோ செய்யப்போக வேறு ஏதோ சரியாகும் !

நாம் சில குறுக்கேழுது க்கட்டங்களை கவனித்து இருக்கவே மாட்டோம் ! ஆனால் ,அவைகளில் சரியான விடை தானே வந்து உத்கார்ந்து இருக்கும்  !

நாம் பார்க்கத போதே சில பிரச்சனைகள் சுமூகமாக தீர்ந்து விடும்...

கிராஸ் வோர்ட் ஐ  சரியாக முடிக்கும் பொது- ஒரு சாதனை செய்தது போல உணர்வோம்!

இதே போல நம் பிரச்சனைகள் தீரும்/தீர்ப்போம் என்ற எண்ணம் வரும்...

தன்னம்பிக்கை பிறக்கும்...

அன்றைய பிரச்சனைகளை புது உற்சாகத்துடன் அணுகுவேன்!

நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்...