badge

Followers

Monday 24 February 2014

காரட் கொத்துமல்லி சப்பாத்தி


கொஞ்சம் காரட் ,கொஞ்சம் பச்சை கொத்துமல்லி ,சுறுக் என்ற காரத்துக்கு பச்சைமிளகாய்...
சேர்த்து இந்த சப்பாத்தி செய்து பார்ப்போமா ....








தேவையான பொருட்கள்


கோதுமை மாவு-2 கப்

காரட்-2

கொத்துமல்லி தழை-1 கைப்பிடி

பச்சை மிளகாய் - 3-4

உப்பு - ருசிக்கு தேவையான அளவு

கோதுமை மாவு -1/4 கப்
(மேல் மாவு)

நெய்/எண்ணை  -தேவையான

தண்ணீர் - சிறிது அளவு




செய்முறை


  1. தோல் சீவி நறுக்கிய காரட்,சுட்தபடுத்திய மல்லித்தழை ,பச்சை மிளகாய் ,உப்பு,சேர்த்து மிக்ஸ்ஸியில்  கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.(தண்ணீர் சேர்க்க வேண்டாம் )
  2. அரைத்த காய் கலவையை மாவுடன் சேர்த்து நன்றாக பிசையவும்.சிறிது என்னை/நெய் சேர்த்துப் பிசைந்தால் சப்பாத்தி மிகவும் மெதுவாக இருக்கும்.
  3. தேவை பட்டால்  சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக பிசையவும்.காய்களிலேயே தண்ணீர் பசை இருப்பதால் அதிகம் தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
  4. 30 நிமிடங்கள் மாவை ஊற வைக்கவும்...






  1. மேல் மாவு தூவி மாவு உருண்டைகளை சப்பாத்திகளாக இடவும்.



சூடான தோசைக்கலில் இரண்டு பக்கங்களும் வேகும் வரை நெய் விட்டு சுட்டு

எடுக்கவும்.,


காரட் டின்  நிறம் இந்த சப்பாத்திக்கு ஒரு நல்ல மஞ்சள் நிறத்தை தரும்.

இந்த சப்பாத்தியில் காய்கள்  இருப்பதால் இதற்க்கு சைடு டிஷ் ஊறுகாய் +தயிர் பச்சிடி போதும்.



11 comments:

  1. தோற்றத்தில் தித்திப்பு தேங்காய் போளி போல அழகாக உள்ளது. பாராட்டுக்கள்.

    இதுபோலெல்லாம் மாறுதலாக செய்து தரவும், சாப்பிடவும் கொடுத்து வைத்திருக்கணும், தங்கள் ஆத்துக்காரர் போல. ;))))).

    பிரியமுள்ள கோபு

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி சார் .உங்கள் மேலிடத்தில் சொன்னால் இன்று உங்களுக்கும் காரட் கொத்துமல்லி சப்பாத்தி சுடச்சுட தயார் ! :-)))

      Delete
    2. ;))))) அதெல்லாம் ஒரு காலம் மேடம்.

      ஆனால் சும்மா சொல்லக்கூடாது, அந்த நாட்களில் [இளமை காலங்களில்] நான் எது கேட்டாலும், எப்போது அகாலத்தில் கேட்டாலும், சுடச்சுட சுவையாக செய்துகொடுத்து அசத்தியவள் தான், என் மேலிடம்.

      நள்ளிரவு சுடச்சுட வெங்காய பஜ்ஜி வேண்டும் என்றெல்லாம் படுத்தியுள்ளேன். எல்லாவற்றிற்கும் ஈடுகொடுத்து, என்னைத் திருப்தி படுத்திய தங்கமே தங்கம் தான் ..... அன்று.

      ஆனால் இன்று ...... ?????

      அதனால் தான் ’என் மேலிடம்’ என நானே அவளுக்குப் பிரமோஷன் கொடுத்துள்ளேன்.

      உடல்நலம் தான் முக்கியம் என்கிறாள் ....... இன்று. அதுவும் நன்மைக்கே.

      அன்புடன் கோபு

      Delete
    3. //நள்ளிரவு சுடச்சுட வெங்காய பஜ்ஜி வேண்டும் என்றெல்லாம் படுத்தியுள்ளேன்// too much .Sir:)))
      She is right.as they say,THE BOSS IS always right....She is your real Health manager...
      In fact most middleaged wives become one.

      Delete
    4. ;))))) உடல்நலம் முக்கியம் தான், இருந்தாலும் நாக்கு நமக்குக் கட்டுப்படாமல் இப்போதும் நமநம என்கிறது .... பழக்க தோஷத்தால் ;)))))

      Delete
    5. உண்மை தான்...இது ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பிரச்சனை...

      Delete
  2. சத்துள்ள சப்பாத்தி குறிப்பிற்கு நன்றி...

    ReplyDelete
  3. காய்,மல்லி சேருவதால் சத்துக்கள் அதிகரிக்கிறது...
    சுவையும் கூட!
    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  4. சுப்பர் ! இன்றே செய்துப்பார்த்துவிடுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அவசியம் செய்து பார்த்துவிட்டு ,எப்படி இருக்கு என்று சொல்லுங்க :)))

      Delete
  5. படிக்கும் போதே ருசியாக உள்ளது

    ReplyDelete